Saturday, January 29, 2011

ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்!

Rajini
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது.

எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொருட்செலவில், சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் துணை நிறுவனமான ஹரா பிக்சர்ஸுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எந்திரன் குழு அப்படியே இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறது.

ரத்னவேல் ஒளிப்பதிவை கவனிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு ஆன்டனி, கலை இயக்கத்தை ராஜீவன் என முன்னணி கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

ரஜினி ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அணுகியுள்ளனர்.

மூன்று முகம், ஜான் ஜானி ஜனார்தன் படங்களுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் படம் ‘ராணா’தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவதார் போல இந்தப் படம் இருக்கும் என ரஜினியே முன்பு பேட்டியில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் குறித்து ஈராஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், “இந்திய சினிமாவின் நிகரில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முற்றிலும் வித்தியாசமான, முழு நீள ரஜினி படமாக ராணா உருவாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்…”, என்றார்.

ராணாவின் தொழில் நுட்ப இயக்குநர் என்ற புதிய பொறுப்பேற்றுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், “ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக ராணா அமையும்,” என்றார்.

ராணாவின் தொழில்நுட்பப் பணிகளை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஐக்யூப் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் கவனிக்கின்றனர். இந்த நிறுவனம் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக எம்மி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
English summary
Once again, Superstar Rajinikanth will play three roles in his next project ‘Raana', which brings the Rajinikanth-director K.S.Ravikumar-composer A.R. Rahman combination together after nearly a decade.

Friday, January 28, 2011

பில்லா 2-ல் அனுஷ்கா?

Anushka in Telugu Billa
பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப் படத்தை, ரஜினியின் பில்லா படத்தைத் தயாரித்த காலம் சென்ற பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. படத்துக்கு நாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. பில்லா தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. கவர்ச்சிக்கு புது இலக்கணமே படைத்தார் அந்தப் படத்தில்.

எனவே பில்லா 2-ல் அவரையே அஜீத் ஜோடியாக்கத் திட்டமிட்டு அணுகினர். ஆனால் தமிழில் ரஜினியைத் தவிர வேறு யாருடனும் இனி நடிப்பதாக இல்லை என்ற 'வைராக்கியத்துடன்' உள்ள அனுஷ்கா, முதலில் மறுத்துவிட்டாராம். பின்னர் பெரிய தொகை, படத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறித்து விளக்கியதில் 'பார்க்கலாம்' என்று கூறியுள்ளாராம்!
English summary
Anushka continues to be Kollywood's most in demand actress to do big films. The latest we hear is that Anushka signs up Billa-2 with Ajith. Directed by Vishnuvardhan, the shooting of Billa 2 will be launched in April.

Thursday, January 20, 2011

மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றும் திட்டம்-இன்று முதல் அமல்

Cell Phone
டெல்லி: மொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும். தற்போது இதற்கு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் இதை இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் பலனடைய உள்ளனர்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது சர்வீஸை மேம்படுத்த உதவும். போட்டிகள் அதிகரிக்கும். இது தரமான சேவையை வாடிக்கையாளர்கள் அடைய உதவியாக இருக்கும்.

முதலில் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.

அதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரிலும் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.

கர்நாடகத்தி்ல மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.

சேவையை மாற்றுவது எப்படி?

கீழ்க்கண்டவற்றை பின்பற்றி நமது சேவையை மாற்றிக் கொள்ளலாம்.

- உங்களது செல்போன் எண்ணை 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவியுங்கள்.

- உங்களுக்கு தற்போதைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.

- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
Read: In English
- அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் மாற்றப்பட்டு விடும்.

- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே
English summary
A total of 700 million Indians use cell phones. With mobile number portability kicking in across the country on Thursday, many customers, especially pre-paid ones, might abandon ship. Prime Minister Manmohan Singh is slated to flag off the nationwide roll-out of mobile number portability on Thursday, a move that will allow users to switch operators without losing their phone numbers and will force telecom providers to improve the quality of their services. "I think its a great step forward for the consumer, as it enhances choice and brings in more competition, because the more efficient you are as a service provider, the more likely that consumers will choose you," Telecom Minister Kapil Sibal said on Wednesday.

பொங்கல் ரிலீஸ் படங்கள்-காவலன், ஆடுகளம் போட்டா போட்டி

Aadukalam and Kaavalan
உலகெங்கும் சூப்பர் ஹிட், இந்த ஆண்டின் மெகா ஹிட், மூவி ஆப் தி டிகேட், ஹாலிவுட்டுக்கு சவால் என்றெல்லாம் கலர் கலர் வார்த்தைகளுடன் தினமும் விளம்பரம் கொடுக்கப்படும் பொங்கல் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன?

'இந்தப் படம் வசூலில் சூப்பர்' என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லா படங்களுமே ததிங்கினத்தோம் போடுகின்றன.

தற்போதைய நிலவரப்படி விஜய்யின் காவலனும், தனுஷின் ஆடுகளமும் மட்டுமே சற்று ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறுத்தை மற்றும் இளைஞன் பின்தங்கியுள்ளன.

ஜனவரி 14-ம் தேதி தனுஷின் ஆடுகளம் மற்றும் புதிய இயக்குநர் சிவாவின் சிறுத்தை படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களில் ஆடுகளம் முதலிடத்தைப் பெற்றது.

அடுத்த நாள் விஜய்யின் காவலன் மற்றும் பா விஜய்யின் இளைஞன் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த படம் என்பதால் ஓப்பனிங் நன்றாக இருந்தது. திரையிட்ட இடங்களில் ரசிகர் கூட்டம். வழக்கமான விஜய் படம் போல இல்லை என்ற வார்த்தை பரவவே படத்திற்கு ரெஸ்பான்ஸும் இருந்தது.

வசூலிலும் கூட மற்ற மூன்று படங்களையும் முந்தியது. இப்போது நான்கைந்து நாள்கள் முடிந்த நிலையில், தனுஷின் ஆடுகளத்துடன் முதலிடத்திற்குப் போட்டா போட்டியில் இறங்கியுள்ளது காவலன்.

ஆடுகளத்திற்கு வார இறுதிகளில் 90 சதவீதம் நிரம்பிய திரையரங்குகளில் இப்போது 40 முதல் 50 சதவீத பார்வையாளர்கள் உள்ளனர். ஆன்லைனில் எப்போதும் சுலபத்தில் கிடைக்கிறது இந்தப் படத்துக்கான டிக்கெட்.

இப்படி காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்.
English summary
Vijay's Kaavalan and Danush's Aaduikalam are in close race among Pongal release movies. Both are competing for taking the first place. At the same time, the market was divided because no theatre could gauge which film was the winner. At the end of first week, Aadukalam is leading in the race thanks to its good word-of-mouth, strong multiplex preference and giant publicity on the Sun Network.

தியேட்டர்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக காட்ட திட்டம்

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதனால் திரையுலகினர் பீதியடைந்துள்ளனர்.

உலககோப்பை கிரிக்கெட் பிப்ரவரி 19-ந்தேதி துவங்குகிறது. ஏப்ரல் வரை இது நடைபெறும். ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரலில் துவங்கும். இப்போட்டிகளால் தமிழ் படங்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு காவலன், ஆடுகளம், இளைஞன், சிறுத்தை போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின. ஆனால் இன்னும் பல புதுப் படங்கள் ரிலீஸாகாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 30 படங்கள் இப்படி இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் வரவுள்ளதால் திரையுலகினருக்குப் பெரும் சிக்கலாகியுள்ளது. இந்த நேரத்தில் ரஜினி படமாகவே இருந்தாலும் கிரிக்கெட் விசிறிகள், கிரிக்கெட் போட்டியைத்தான் விரும்பிப் பார்ப்பார்களே தவிர தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள் என்பதால் இந்த பீதி.

இது போக, கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக தியேட்டர்களில் ஒளிபரப்ப முயற்சிள் நடந்து வருகிறதாம். அதேபோல அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பவும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். இது நடந்தால் திரையுலகுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 140 படங்கள் வரை வந்தாலும் கூட 10 படங்கள்தான் கையைக் கடிக்காமல் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இப்படி கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பினால் நிலைமை மோசமாகி விடும் என திரையுலகினர் கவலைப்படுகின்றனர்.

இது குறித்து திரைப்பட விநியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் கூறுகையில், கடந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்பு முயற்சி நடந்தபோது கடுமையாக எதிர்த்தோம். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வருடமும் உலக கோப்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப சில தியேட்டர்கள் முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அப்படி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பினால் வன்மையாக எதிர்ப்போம்.

அந்த தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். கிரிக்கெட்டுக்கு மைதானம் இருக்கிறது. டி.வி. இருக்கிறது. தியேட்டர்கள் நாங்கள் தொழில் செய்யும் இடம் அங்கு கிரிக்கெட்டை ஒளிபரப்புவது கண்டனத்துக்குரியது என்றார்.

ஆனால் தியேட்டர்களில் ஒரு தரப்பினர் படங்களைத் திரையிட்டு காற்று வாங்குவதற்குப் பதில் இப்படி கிரிக்கெட் போட்டிகளைக் காட்டி காசு பார்க்கலாம் என்று மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரையுலகினரிடையே மோதல் மூளும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாம்.
English summary
There is an attempt to telecast World Cup and IPL cricket matches in Theatres. Distributors are against this move. WC cricket begins in february. IPL4 tournament starts after WC. Theatre operators are keen to live telecast these matches. Bue distributors say, this will kill the Cinema industry. We will oppose this move, said distributor Kalaipuli Sekaran.

Monday, January 17, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு-ஸ்ரீசாந்த், ரோஹித் நீக்கம்-அஸ்வினுக்கு இடம்

Ashwin and Srishanth
சென்னை: உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஆர்.அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளன. பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை ஏற்கனவே இந்தியா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 15 பேர் கொண்ட இறுதி அணியை இன்று அறிவித்தது இந்திய அணி தேர்வுக்குழு. ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய தேர்வாளர் குழு சென்னையில் கூடி இன்று இந்திய அணி வீரர்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தியது.

இதன் இறுதியில் டோணி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இந்திய அணி விவரம்:

எம்.எஸ்.டோணி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஜாகிர் கான், பிரவீன் குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஆர்.அஸ்வின், பியூஷ் சாவ்லா.

முரளி விஜய்-திணேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுப்பு

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல திணேஷ் கார்த்திக்கும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால். அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில், டோணி மட்டுமே விக்கெட் கீப்பராக உள்ளார். 2வது விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் 7 பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மென்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ஆல் ரவுண்டர் (யூசுப் பதான்) இடம் பெற்றுள்ளனர்.
English summary
Indian team for WC cricket has been announced. Dhoni led Indian team was selected in Chennai on Monday. The team also include Sachin Tendulkar, Virender Sehwag, Gautam Gambhir, Yuvraj Singh, Virat Kohli, Suresh Raina, Yusuf Pathan, Zaheer Khan, Praveen Kumar, Munaf Patel, Ashish Nehra, Harbhajan Singh, Ashwin Kumar, Piyush Chawla.

சிறுத்தை - பட விமர்சனம்

Tamanna and Karthi
பையா படத்தில் நாம் பார்த்த பையனா இது என்று வியக்கும் அளவுக்கு சிறுத்தையில், டிஸ்பி மற்றும் திருடன் என இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தியுள்ளார் கார்த்தி.

ஆந்திர மாவட்டம் தேவிபட்டினத்தை ஒரு ரவுடிக் குடும்பம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்கும்போது மீசையை முறுக்கிக் கொண்டு, அழகிய பெண் குழந்தையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை கதிகலங்க வைத்து மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லன் தாக்குதலில் படுகாயம் அடையும் டிஎஸ்பி சென்னைக்கு சிகிச்சைக்காக வருகிறார்.

சென்னையைக் கலக்கும் 'அஜக் மஜக்' திருடன் ராக்கெட் ராஜா (2வது கார்த்தி). காட்டு பூச்சியுடன் (சந்தானம்) சேர்ந்து திருடித் திருடி ஜாலியாக இருக்கிறார். இந்த இடத்தில் ஹீரோயினை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். சென்னையில் இரண்டு கார்த்திகளும் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சரியான கலாட்டா, அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் சிறுத்தை. டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரம் கம்பீரமாக இருந்தது. இப்படி ஒரு போலீஸ் நம்ம ஊருக்கு வரமாட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம்.

ரத்தினவேல் பாண்டியனாக மாறி வரும்போது கார்த்தி நடக்கும் நடை ரஜினிகாந்த் மூன்று முகத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு நடப்பதை நினைவூட்டியது.

ரத்னவேல் பாண்டியன் கிடுகிடு என்றால் ராக்கெட் ராஜா சடுகுடு. அந்தத் திருடன் கதாபாத்திரத்தில் கார்த்தி திரையரங்கையே குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார்.

ராக்கெட் ராஜாவுடன் காட்டுப்பூச்சி என்ற பெயரில் சந்தானம் செய்யும் காமெடி அதகளம்.

முந்தைய படங்களில் டான்ஸில் சொதப்பிய கார்த்தி, இப்படத்தில் டபுள் புரமோஷன் வாங்குகிறார்.

தமன்னாவுக்கு நடிப்பதை விட அழகைக் காட்டி விட்டுச் செல்லத்தான் நிறைய வாய்ப்பு, சொன்னதை செய்திருக்கிறார். இசை பிரமாதம் என்று சொல்ல முடியாது. ராக்கெட் ராஜா பாடல் பரவாயில்லை.

ஆக்ஷன் படமாக இருந்தாலும் படத்தில் கார்த்திக்கு பன்ச் டயலாக் இல்லை. இதற்காகவே டைரக்டரை ஒருமுறை வாயார பாராட்டலாம்.

'சிங்கம்' சூர்யாவுக்கு, சவால் இந்த 'சிறுத்தை' கார்த்தி.

சிறுத்தை - கம்பீரம்.
English summary
karthi-Tammanna starrrer Siruthai hit screens on Pongal. It is a typical masala movie. Karthi-Santhanam duo did a good job which can be heard in the roaring theatre. Tamanna does her role as a glam doll perfectly. Music is not that much captivating. With Siruthai, Karthi has reached another milestone in acting.